இடைக்கழிநாடு, வெண்ணாங்குபட்டு அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்: பனையூர் பாபு எம்எல்ஏ வழங்கினார்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சியில் உள்ள கடப்பாக்கம் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி கலை அரங்கில் நேற்று முன்தினம் மாலை நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு, செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் மோகன்தாஸ், ஒன்றிய செயலாளர் சிற்றரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை பங்கஜம் அனைவரையும் வரவேற்றார். இதில், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு கலந்து கொண்டு, 250க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதேபோன்று, வெண்ணாங்குபட்டு அரசினர் மேல்நிலைப்பள்ளி, 11ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 81 சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் பிரேமா சங்கர், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் பாரத், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மணிவண்ணன், சகாதேவன், சுசிலா ஆறுமுகம், புவனேஸ்வரி முருகதாஸ், லட்சுமி சங்கர், பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில், அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மேரி லிண்டா நன்றி கூறினார்.

The post இடைக்கழிநாடு, வெண்ணாங்குபட்டு அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்: பனையூர் பாபு எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: