வெள்ளிப்பாலி முனியப்பன் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செங்கோடு, ஆக.29: திருச்செங்கோடு அடுத்த சீதாராம்பாளையத்தில் உள்ள வெள்ளிப்பாலி முனியப்பன், கருப்பணார் கன்னிமார் தெய்வங்களுக்கு, மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், துர்க்கை ஹோமம், வாஸ்து சாந்தி நடைபெற்றது. விழாவையொட்டி, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, ஊர்மக்கள் முளைப்பாலிகை எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். நேற்று காலை வெள்ளிப்பாலி முனியப்பன், கருப்பணார், கன்னிமார் தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், மங்கள வாத்தியங்கள், வேதங்கள் முழங்க கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மகா அபிஷேகம், கோ பூஜை ஆகியவை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து வரும் 9ம்தேதி காலை வரை மண்டல பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சீதாராம்பாளையம், கருவேப்பம்பட்டி, மாங்குட்டைபாளையம் ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post வெள்ளிப்பாலி முனியப்பன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: