கட்சியில் இருந்தும், அமைச்சர், எம்எல்ஏ பதவியில் இருந்தும் சம்பாய் சோரன் ராஜினாமா: பா.ஜவில் இணைய முடிவு

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் கைது செய்த போது மூத்த அமைச்சர் சம்பாய் சோரன் புதிய முதல்வராக பதவி ஏற்றார். ஹேமந்த் சோரன் ஜாமீனில் வெளியே வந்ததும் மீண்டும் முதல்வரானதால் சம்பாய் சோரன் அதிருப்தி அடைந்தார். அவர் பா.ஜ பக்கம் செல்லப்போவதாக தகவல் வெளியானது. நேற்று டெல்லியில் இருந்து ராஞ்சி வந்த சம்பாய் சோரன் ஜேஎம்எம் கட்சி, அமைச்சர், எம்எல்ஏ பதவிகளில் இருந்து ராஜினாமா செய்தார்.

இதுதொடர்பாக மூத்த தலைவர் ஷிபுசோரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,’ நான் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் முதன்மை உறுப்பினர் மற்றும் அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளேன். பழங்குடியினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஜார்கண்ட் மக்களின் பிரச்சனைகளில் எனது போராட்டம் தொடரும். ஜே.எம்.எம் கட்சியின் தற்போதைய செயல்பாடு மற்றும் கொள்கைகளால் பாதிக்கப்பட்டு பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். சம்பாய் சோரன் விரைவில் பா.ஜவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

The post கட்சியில் இருந்தும், அமைச்சர், எம்எல்ஏ பதவியில் இருந்தும் சம்பாய் சோரன் ராஜினாமா: பா.ஜவில் இணைய முடிவு appeared first on Dinakaran.

Related Stories: