கூடலூரில் ஊடுபயிராக சாமந்தி சாகுபடி

*விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம்

கூடலூர் : கூடலூரில் காய்கறி தோட்டங்களில் ஊடுபயிராக சாமந்தி சாகுபடி நடைபெற்று வருகிறது. இதனால் இரட்டிப்பு வருமானம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் குறிப்பாக கூடலூர் சுற்றுவட்டார பகுதி, தோட்ட விவசாயத்திற்கு உகந்த சூழலுடன் இருப்பதால் அதிகமாக வெண்டை, கத்தரிக்காய், சீனி அவரை, மிளகாய், தக்காளி உள்ளிட்ட பயிர்கள் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள், தமிழகத்தின் பிறப் பகுதிகளுக்கும், அண்டை மாநிலமான கேரளாவிற்கும் விற்பனைக்காக அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது.

தோட்டத்தில் ஓரே வகையிலான காய்கறி மட்டுமே பயிரிடப்படும் வழக்கமான நடைமுறைக்கு மாறாக, புதிய முயற்சியாக தோட்ட ஓரக்கால் மற்றும் கரைகளில் ஊடுபயிராக, முக்கிய பயிருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வேளாண்மை ஆய்வாளர்களின் வழிகாட்டுதலோடு பிற பயிர் விவசாயம் செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கிறது.
அந்த வகையில், கூடலூர் பகுதியில் முட்டைக்கோஸ் விவசாயத்திற்கு நடுவே சாமந்திப் பூக்கள் நடப்பட்டு ஒரே போகத்தில் இரட்டிப்பு வருமானம் ஈட்டுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

The post கூடலூரில் ஊடுபயிராக சாமந்தி சாகுபடி appeared first on Dinakaran.

Related Stories: