தஞ்சையில் பழுதடைந்த ‘மூன்றாவது கண்’ எனப்படும் தஞ்சை அம்மா மாலைநேர காய்கறி அங்காடிக்கு அடிப்படை வசதிகள்

தஞ்சாவூர், ஆக. 27: ‘அம்மா மாலைநேர காய்கறி அங்காடி’க்கு கழிவறை, மின்சாரம், குடிநீர் வசதிகளை செய்து தர வேண்டும் என ஏஐடியூசி கூட்டத்தில் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட அலுவலகத்தில் சங்க தலைவர் சேவையா தலைமையில் ஏஐடியூசி தொழிலாளர்கள் சங்க கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். கூட்டத்தில், மாநில செயலாளர் தில்லைவனம், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், தெரு வியாபார சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமரன், சங்க நிர்வாகிகள் அயூப்கான், சுடலைமுத்து, வெங்கடேசன், ராஜவடிவேல், ஜெயலெட்சுமி, ஆகியோர் பங்கேற்றனர். பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

கூட்டத்தில், தஞ்சாவூர் காவேரி சிறப்பங்காடி அருகில் ‘அம்மா மாலைநேர காய்கறி அங்காடி’ செயல்பட்டு வருகிறது. இந்த காய்கறி கடைகளில் ஆண்கள், பெண்கள் என நூறு பேர் வேலை செய்கின்றனர். தினந்தோறும் காய்கறி வாங்க நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்தப் பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளான மின்வசதி, குடிநீர், கழிவறை வசதியின்றி தொழிலாளர்களும், காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அம்மா மாலைநேர காய்கறி அங்காடியில் மின்சாரம், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்துவது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

The post தஞ்சையில் பழுதடைந்த ‘மூன்றாவது கண்’ எனப்படும் தஞ்சை அம்மா மாலைநேர காய்கறி அங்காடிக்கு அடிப்படை வசதிகள் appeared first on Dinakaran.

Related Stories: