தமிழ்ப் பல்கலைகழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை சார்பில் வியாழ வட்ட ஆய்வரங்கம்

தஞ்சாவூர், ஆக.26: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைகழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறையின் வியாழவட்ட ஆய்வரங்கம் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தரும் மொழியியல் பேராசிரியருமான திருவள்ளுவன் தலைமை வகித்து பேசியதாவது:மனித மூளையானது பில்லியன் கணக்கான நியூரான்களின் துணையுடன் இயங்குகிறது. நாள்தோறும் மனித மூளை புதிய நியூரான்களை உருவாக்குகிறது.

அதில், மனித உடலின் செயலாக்கத்திற்கு 12 நரம்புகள் மிக முக்கியத் துணையாக நின்று உதவுகின்றன. மனிதர்களின் மழலைப் பருவத்தில் ஏற்படும் மொழி வெளிப்பாட்டுக் குறைபாடுகள், வயதான காலத்தில் ஏற்படும் நினைவு மறப்பு போன்ற மொழி தொடர்பான குறைபாடுகளுக்கும், மூளைக்கும் இடையில் நரம்பு மண்டலச் செயல்பாடுகள் ஊடாடி நிற்கின்றன. மொத்தத்தில் மனித மூளையின் நடவடிக்கைகளைநிர்ணயிக்கும் பெருமண்டலமாக நரம்பியல் விளங்குகிறது. இதையே “நரம்பு மொழியியல்” (Neuro Linguistics) என்று மொழியியல் துறை தனியே ஆய்வு செய்து வருகின்றது என பேசினார்.

இந்நிகழ்வில் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைத் தலைவர் முனைவர் குறிஞ்சிவேந்தன், முனைவர்இளையாபிள்ளை, மூத்த மொழியியல் பேராசிரியர் நடராசப்பிள்ளை உள்ளிட்டகல்வியியலாளர்கள் மற்றும் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post தமிழ்ப் பல்கலைகழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை சார்பில் வியாழ வட்ட ஆய்வரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: