நடிப்பிற்கான தேசிய மற்றும் கேரள அரசு விருதுகளும் இவருக்கு கிடைத்துள்ளன. நான்காம் வகுப்பில் படிப்பை நிறுத்திய இந்திரன்சுக்கு மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பல வருடங்களாக இருந்து வந்தது. இந்நிலையில் கேரள அரசின் எழுத்தறிவுத் திட்டத்தின் மூலம் நேரடியாக ஏழாம் வகுப்பு இணைத் தேர்வு எழுத இவர் தீர்மானித்தார். இதற்காக கடந்த சில மாதங்களாக இவர் தீவிரமாக பாடங்களை படித்து வந்தார். நேற்று திருவனந்தபுரம் அட்டங்குளங்கரை பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் இவர் தேர்வு எழுதினார்.
The post 68வது வயதில் 7ம்வகுப்பு தேர்வு எழுதிய நகைச்சுவை நடிகர் appeared first on Dinakaran.