வெள்ளிவாயல் ஊராட்சி அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

பொன்னேரி:மீஞ்சூர் அடுத்த வெள்ளிவாயல்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று சென்னை கோல்டன்சன் அரிமா சங்கம் சார்பில் பசுமை திட்டத்தின்படி பள்ளி வளாகத்தில் 40 மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் இந்த பள்ளியில் படிக்கும் 192 மாணவ மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மேலும் எல்கேஜி, யுகேஜி பயிலும் மாணவ மாணவியருக்கு அழகிய வண்ணத்தில் 25 பேருக்கு டீ சர்ட் வழங்கப்பட்டது. இதனை மணலி புதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கர் மாணவ மாணவியர்களுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக வெள்ளி வாயல் சாவடி ஊராட்சி மன்ற தலைவர் உமையாள் பொன்.பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், வார்டு உறுப்பினர் டேனியல் ஆகியோர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினர்.  நிகழ்ச்சிக்கு சென்னை கோல்டன் சன் தலைவர் லயன் இளங்கோ, செயலாளர் விஜய், பொருளாளர் லயன் வினோத் ஆகியோர் நிகழ்ச்சியை வழிநடத்தினர். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதி நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சி தொகுப்பினை நிகழ்ச்சி தொகுப்பாளர் லயன் ஜனார்தனன் வழங்கினார். இதில், அரிமா சங்கத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post வெள்ளிவாயல் ஊராட்சி அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் appeared first on Dinakaran.

Related Stories: