இடதுசாரி, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவர் : சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!!

புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

*காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : சீதாராம் யெச்சூரி எனது நண்பர் நம் நாட்டின் மீது தெளிவான புரிதல் கொண்டவர், அதன் கொள்கையை காப்பாற்ற நினைப்பவர். நமது நீண்ட உரையாடல்களை மிஸ் செய்வேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

* மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி : சீதாராம் யெச்சூரி மறைவு தேசிய அரசியலுக்கு பெரும் இழப்பு.சீதாராம் யெச்சூரியின் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு ஆழ்ந்த இரங்கல்.

*ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி : பொதுவாழ்வில் சீதாராம் யெச்சூரி ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவு கூரப்படும்.

*இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் : சீதாராம் யெச்சூரியின் மறைவு கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே பேரிழப்பு.

*திமுக எம்.பி திருச்சி சிவா: சீதாராம் யெச்சூரியின் கட்டுரைகள் கருத்தாழமிக்கதாக இருக்கும்.

*புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி : இடதுசாரி சித்தாந்த வளர்ச்சிக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் யெச்சூரி.

*தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: அடித்தட்டு மக்களின் எண்ணங்களை பிரதிபலித்தவர் யெச்சூரி.

பாஜக மூத்த தலைவர் தமிழிசை : மாணவர் பருவத்தில் இருந்தே ஒரே கொள்கையை தீவிரமாக பின்பற்றியவர் சீதாராம் யெச்சூரி.

*விசிக தலைவர் திருமாவளவன்: யெச்சூரியின் மறைவு உழைக்கும் வர்க்கத்திற்கு இழப்பு; இந்தியா கூட்டணி அமைய பங்காற்றினார்.

*ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு : அரசியலில் மரியாதைக்குரியவர் யெச்சூரி; அடிமட்ட மக்களின் பிரச்னைகளை அறிந்தவர்..

*இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ராஜா : இடதுசாரி மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மிகச்சிறந்த தலைவர்களில் சீதாராம் ஒருவர். சீதாராம் யெச்சூரி ஒரு திறமையான நாடாளுமன்றவாதி. சீதாராம் யெச்சூரியின் குடும்பத்தினருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

*காங்கிரஸ் எம்பி ஜெயராம் ரமேஷ்: சீதாராம் யெச்சூரியின் மக்கள் பணி ஒருநாளும் மறக்கப்படாது

*தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை : சீதாராம் யெச்சூரியின் மறைவு ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கு பேரிழப்பு

The post இடதுசாரி, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவர் : சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!! appeared first on Dinakaran.

Related Stories: