செங்கோட்டை, ஆக.21:வரலாற்று சிறப்புமிக்க சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் கி.பி.1022ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். 1000 ஆண்டுகளை கடந்த இக்கோயிலில் கடந்த 2008ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து கடந்த 14 ஆண்டுகளாக ஏ.வி.கே. கல்வி குழும தலைவரும், அதிமுக மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளருமான அய்யாத்துரைப் பாண்டியன் தலைமையில் வருஷாபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் அவர், தனது சொந்த செலவில் கோயிலுக்கு முன் நுழைவுவாயிலும், முன் முகப்பு மண்டபமும் அமைத்துக் கொடுத்துள்ளார். வருகிற 23ம்தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்கு சுவாமி விமானம், முன் மண்டபம், கோயில் தோரணவாயில் ஆகியவற்றிற்கு தனது சொந்த செலவில் பராமரித்து பஞ்சவர்ணம் பூசி கொடுத்து, கோயில் திருப்பணி உபயதாரராக அய்யாத்துரை பாண்டியன் பங்கேற்கிறார்.
The post சங்கரநாராயணசுவாமி கோயிலில் 23ம்தேதி கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.