ஆங்கில மொழி சமஸ்கிருதத்தின் பயன்பாட்டை குறைத்துவிட்டது: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: ஆங்கில மொழி வந்த பிறகு, அது சமஸ்கிருதத்தின் பயன்பாட்டை குறைத்துவிட்டது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சமஸ்கிருத தின நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: சமஸ்கிருத திவாஸ் பல சதாப்தங்களாக கொண்டாடப்படுகிறது, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக சமஸ்கிருத பாரதி நிறைய முயற்சிகளை செய்துள்ளது. பாரதத்தில் பல்வேறு மொழிகளும், பல்வேறு உணவு பழக்கங்கள் கொண்ட மக்களும் உள்ளனர். பன்முக தன்மையின் முகமாக நமது தேசம் விளங்குகிறது. சமஸ்கிருதம் ஒரு மொழி மட்டும் அல்ல, ஒருவர் தன் வாழ்வை எவ்வாறு வாழ வேண்டும் என்பதை போதிக்கிறது.

ஆங்கில மொழி வந்த பிறகு அது சமஸ்கிருதத்தின் பயன்பாட்டை குறைத்தது, ஆங்கிலம் பேசுவதை மக்கள் கவுரவமாக கருதிவிட்டனர். சமஸ்கிருதம் ஒரு சக்தி வாய்ந்த மொழி, அறிவியல் பூர்வமான மொழி. உலகம் பல சவால்களை சந்தித்து வருகிறது. அறிவியல் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் சமஸ்கிருத மொழியில்தான் அறிவியல் இருந்தது. குறிப்பாக நம் முன்னோர்கள் எழுதிய புத்தகங்களில் இயற்பியல் குறித்த அறிவியல் தகவல்களும் சமஸ்கிருதத்தில்தான் இருந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

The post ஆங்கில மொழி சமஸ்கிருதத்தின் பயன்பாட்டை குறைத்துவிட்டது: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: