திருச்சி. ஆக.15: திருச்சி மண்டல தலைமை தபால் நிலையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் இந்த பிரிவினைத் திட்டம் குறித்த கண்காட்சி தலைமை தபால் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
“பார்டிசன் ஹாரர்ஸ் ரிமம்பரன்ஸ்” என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கண்காட்சியில் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை திட்டம் செயல்படுத்தபட்ட சமயத்தில் எடுக்கப்பட்ட 51 பழைய புகைப்படங்கள் இடம்பெற்றன.
இந்த புகைப்படங்களை தபால் நிலைய ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பார்த்தனர். ஏற்பாடுகளை திருச்சி மண்டல தபால்துறை பொது மேலாளர் நிர்மலாதேவி செய்திருந்தார். மேலும் திருச்சி மண்டல முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் பிரகாஷ் கலந்துகொண்டு கண்காட்சியினை பார்வையிட்டார். அவருடன் மக்கள் தொடர்பு ஆய்வாளர் ஜம்புநாதன் உள்ளிட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.
The post தபால் நிலையம் சார்பில் பிரிவினை திட்டம் குறித்த கண்காட்சி appeared first on Dinakaran.