காலநிலை மாற்றத்தால் தேயிலை தோட்டங்களை தழுவி செல்லும் மேக கூட்டம்


கோத்தகிரி: கோத்தகிரி அருகேயுள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலநிலையில் மாற்றம் ஏறப்பட்டு அவ்வப்போது பகல் நேரங்களில் மிதமானது முதல் சாரல் மழை பெய்து வரும் நிலையில் அப்பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள், மலை முகடுகளில் தழுவி செல்லும் காட்சி பார்வையாளர்கள் கவர்ந்தது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது காலநிலை மாற்றம் காரணமாக பகல் நேரங்களில் அவ்வப்போது மிதமானது முதல் சாரல் மழை பெய்வதில் பூமி ஈரப்பதம் அடைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழையும், வெயிலும் சூழ்ந்த காலநிலை நிலவி வந்தது.

இந்நிலையில், கோத்தகிரி அருகே உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி காட்சி முனை‍, டால்பின் நோஸ் காட்சி முனைகளை ஒட்டியுள்ள மலை எல்லைப்பகுதியில் மாலை நேரத்தில் சாரல் மழை குறைந்து இதமான வெயில் சூழ்ந்த காலநிலை நிலவி வந்தது. இதனால், அப்பகுதிகளில் உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து புவி வெப்பமடைதல் காரணமாக மேக கூட்டங்கள் தேயிலை தோட்டங்கள் மற்றும் மலை முகடுகளில் தவழ்ந்து சென்றது.

The post காலநிலை மாற்றத்தால் தேயிலை தோட்டங்களை தழுவி செல்லும் மேக கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: