வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வங்கதேச டெஸ்ட் தொடர் முடிந்த பின் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், அதற்கு அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளது. இந்த 8 டெஸ்ட் போட்டிகளும் மூன்று மாத காலத்தில் தொடர்ந்து நடைபெற உள்ளது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வலுவானவை என்பதால் பும்ரா இந்த எட்டு போட்டிகளிலும் பங்கேற்க வேண்டிய அவசியம் உள்ளது. வங்கதேச டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்றால், அவரது வேலைப் பளுவை குறைக்க வேண்டி நியூசிலாந்து அல்லது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சில போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
அது இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கும். எனவே, அவருக்கு இப்போதே ஓய்வு அளித்து விட்டு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் முழுமையாக பங்கேற்க வைக்க வேண்டும் என்ற முடிவை பிசிசிஐ எடுத்து இருக்கிறது. அதன் காரணமாகவே, பும்ராவுக்கு வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமியை ஆட வைக்கவும் பிசிசிஐ முயற்சி செய்து வருகிறது. அவர் தற்போது தனது கணுக்காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு விட்டார். எனவே, அவர் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பு உள்ளது.
The post வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் பும்ராவுக்கு ஓய்வு: பிசிசிஐ திட்டம் appeared first on Dinakaran.