ரவுடி மயிலாப்பூர் சிவக்குமார் கொலை வழக்கில் தொடர்புரையவர்: சென்னையில் ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்

சென்னை: சென்னை டி.பி.சத்திரத்தில் காவலர்களை தாக்கிய ரவுடி ரோஹித் ராஜனை போலீசார் சுட்டுப் பிடித்தனர். பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய ரவுடி ரோஹித் ராஜன் தேனியில் பதுங்கி இருந்ததாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தேனி விரைந்த அதி விரைவு குற்ற தடுப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்து கீழ்பாக்கம் காவல்நிலையத்தில் தனிப்படை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலவியில் ரவுடி ரோஹித் ஆயுதங்களை எங்கு பதுக்கி வைத்திருக்கிறார் என்பதை அறிவதற்காக அவரை காவலர்கள் அழைத்து சென்றனர். கீழ்பாக்கம் அரசு கல்லறை தோட்டம் அருகே சென்ற போது சரவணக்குமார் பிரதீப் ஆகிய இரு காவலர்களை அரிவாளால் தாக்கி விட்டு தப்ப முயன்றார். அப்போது போலீசார் ரவுடி ரோஹித் ராஜனை பிடிக்க முயன்றபோது தாக்கியதால் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ரவுடி ரோஹித் ராஜன் காயம் அடைந்து, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல ரவுடி ரோஹித் தாக்கியதில் இரண்டு காவலர்கள் காயம் அடைந்துள்ளனர். ரவுடி ரோஹித் ராஜன் வெட்டியதில் காவலர்கள் சரவணகுமார், பிரதீப் ஆகியோர் காயமடைந்தனர். ரவுடி ரோஹித் ராஜன் தாக்கியதில் இரண்டு போலீசார் காயம் அடைந்துள்ளனர் என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ரவுடி மயிலாப்பூர் சிவக்குமார் கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் ரோஹித். ரவுடி ரோஹித் ராஜன் மீது 13 குற்ற வழக்குகள் உள்ளதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post ரவுடி மயிலாப்பூர் சிவக்குமார் கொலை வழக்கில் தொடர்புரையவர்: சென்னையில் ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: