தர்மபுரம்மடம் ஊராட்சியில் ரூ.14 லட்சத்தில் அங்கன்வாடி மையம்

கடையம், ஆக.13: கடையம் யூனியனுக்கு உட்பட்ட தர்மபுரம்மடம் ஊராட்சியில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பஞ். தலைவர் ரூஹான் ஜன்னத் சதாம் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் ஜகாங்கீர் முன்னிலையில் நடந்த இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, புதிதாக அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவர் டி.கே பாண்டியன், ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளர் கணபதி, மாநில அண்ணா போக்குவரத்து சங்கச் செயலாளர் சேர்மதுரை, மாவட்ட பொருளாளர் நூருல் அமீர், ஒன்றியச் செயலாளர் இளங்கோ, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சாகுல் ஹமீது, முகமது மைதீன், வேலாயுதம், ஜமாத் தலைவர் முகமது யூசுப், இமாம் காஜா முகைதீன் ஜமாலி, கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் முகமது ஆரிப் மற்றும் ஜமாத்தார், அங்கன்வாடி பணியாளர்கள், ஊர் மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post தர்மபுரம்மடம் ஊராட்சியில் ரூ.14 லட்சத்தில் அங்கன்வாடி மையம் appeared first on Dinakaran.

Related Stories: