ஊத்தங்கரை, ஆக.13: ஊத்தங்கரை பிடிஓ அலுவலகம் முன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில குழு உறுப்பினர் லெனின் தலைமை தாங்கினார். கல்பனா, முருகன், சரவணன், சுந்தரம், மொழுகு திருமால், கல்பனா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். வேலை துவங்காத இடங்களில் உடனடியாக வேலையை துவக்க வேண்டும். சுழற்சி முறையை கைவிட்டு, அட்டை வழங்கிய அனைவருக்கும் தொடர்ச்சியாக வேலை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். 100 நாள் வேலை நடைபெறும் இடங்களில், பணியாளர்களுக்கு அரசின் சட்டப்படி அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதை உறுதிபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, விவசாய தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.
The post விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.