அதன்படி, தேர்தல் நிதிப் பத்திரங்களால் ஆதாயமடைந்த கட்சிகளின் விபரங்கள் வெளியாகின. அதேபோல் இந்தத் திட்டம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய 2 மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மக்களவை தேர்தலுக்கு பிறகு இந்த தீர்ப்பு வந்ததால், மீண்டும் தேர்தல் நிதிப் பத்திரங்கள் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வருமா? என்ற சந்தேகம் இருந்து வந்தது. இதையடுத்து, இந்த திட்டத்துக்கு மாற்றாக வேறு முன்னெடுப்புகளை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தவுள்ளதா? என மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அளித்த எழுத்துபூர்வ பதிலில், ‘தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பாக புதிய சட்டங்கள் இயற்றும் எண்ணம் அரசிடம் இல்லை’ என்றார்.
The post சுப்ரீம் கோர்ட் ரத்து செய்த நிலையில் தேர்தல் நிதிப் பத்திரத்திற்கு புதிய சட்டமா?: ஒன்றிய அமைச்சர் பதில் appeared first on Dinakaran.