தென்னிந்திய ரோல்பால் போட்டி: தமிழக பெண்கள் அணி சாம்பியன்

சின்னாளபட்டி: தென்னிந்திய ரோல்பால் போட்டியில் தமிழக பெண்கள் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. தமிழ்நாடு ரோல்பால் அசோசியேசன் சார்பில் தென்னிந்திய அளவிலான இரண்டாவது ஜீனியர் மற்றும் சீனியர்களுக்கான ரோல்பால் சாம்பியன்சிப் போட்டி, திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பிரிவில் உள்ள இராஜன் உள் விளையாட்டரங்கில் நடந்தது. போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான அணிகள் கலந்து கொண்டன. ஆண்களுக்கான போட்டிகள் நாக்அவுட் முறையில் நடந்தது. பெண்களுக்கான ரோல்பால் போட்டிகள் ரவுண்ட் ராபின் லீக் முறையில் நடந்தது.ரோல்பால் சங்க மாநில செயலாளர் சுப்பிரமணியன் போட்டிகளை துவக்கி வைத்தார். இரண்டு நாட்கள் நந்த போட்டிகளில் சீனியர் மற்றும் ஜீனியர் பிரிவுகளில் தமிழ்நாடு பெண்கள் அணி முதலிடத்தை பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. கேரள அணி இரண்டாம் இடத்தையும், புதுச்சேரி அணி மூன்றாம் இடத்தையும் பெற்றது. ஆண்கள் ஜீனியர் பிரிவில் தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்தது. கேரளா அணி இரண்டாம் இடங்களையும் பிடித்தது. தொடர்ந்து பரிசளிப்பு விழாவிற்கு சர்வதேச நடுவர் மாஸ்டர் பிரேம்நாத் தலைமை வகித்தார். ரோல்பால் சங்க மாவட்ட தலைவர் வாஞ்சிநாதன் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் காந்திகிராம பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் சுகுமார், தென்மண்டல தொழில்நுட்ப தலைவர் கோவின் குலிக்கால், ஆந்திர மாநில கால்பந்து செயலாளர் அணில்குமார் ரெட்டி, தமிழ்நாடு மாநில ரோல்பால் இணைச் செயலாளர் ராஜசேகர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளையும், பாராட்டு சான்றிதழையும் வழங்கினர். போட்டி நடுவர்களாக டாக்டர் கோவிந்த், கிருஷ்ணகுமார், கலையரசன் பங்கேற்றனர். ராபின் ராஜகாந்த் நன்றி கூறினார்….

The post தென்னிந்திய ரோல்பால் போட்டி: தமிழக பெண்கள் அணி சாம்பியன் appeared first on Dinakaran.

Related Stories: