அயோடின் உப்பு குறித்து விழிப்புணர்வு

பந்தலூர் : கூடலூர் நுகர்வோர மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் சார்பில் உப்பட்டி மகளிர் தையல் பயிற்சி மையத்தில் அயோடின் அவசியங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பயிற்சி மைய ஆசிரியர் சுலோச்சனா தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பேசுகையில்:அயோடின் நுண்ணூட்ட சத்தானது ஏற்கனவே உணவு மூலம் கிடைத்து வந்த சூழலில், இயற்கை சீற்றங்கள் மற்றும் ரசாயன பயன்பாட்டு காரணமாக அயோடின் இயற்கையாக கிடைப்பது குறைந்த விட்டது.

இதனால் பொதுமக்களுக்கு அயோடின் பற்றாக்குறை ஏற்பட்டு தைராய்டு சுரப்பியில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அயோடின் ஒரு மைக்ரோ நியூட்ரிசன் ஆகும். இது அனைவருக்கும் கிடைக்கும் வகையில் உப்பில் சேர்த்து வழங்கப்படுகிறது. அயோடின் சத்து குறையும் பொழுது தைராய்டு சுரப்பிகள் உட்பட அனைத்து வகையான சுரப்பிகளும் சரியான முறையில் செயல்படாமல் பாதிப்பை ஏற்படுத்தும்.

தைராய்டு சரியாக செயல்படாத பட்சத்தில் திடீரென உடல் பருமனாவது. குளிர் தாங்காமல் இருப்பது போன்றவை குளிர் காலத்தில் வியர்வை வருதல், மலக்கட்டு, உள்ளிட்டவை ஏற்படுகிறது.மேலும் கருவளர்ச்சி முதல் மன வளர்ச்சி அடைய செய்தல்,சுறு சுறுப்பாக செயல்படுதல் புத்தி கூர்மை போன்றவை அயோடின் நுண்ணூட்ட சத்தால் கிடைக்கும்.
முறையான அயோடின் சத்து கிடைக்காத பட்சத்தில் மகளிர்களுக்கு மாதவிடாய் சார்ந்த பிரச்னைகள், கரு தங்காமை, மாற்று திறன் குழந்தைகள் பிறத்தல்,தைராய்டு கட்டிகள் போன்ற பலவேறு பிரச்னைகள் ஏற்படும்.பதப்படுத்துதலுக்கான உப்பினை உணவுக்கு பயன்படுத்த கூடாது என்றார்.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசுகையில்: போலியான உப்பாக பலரும் அயோடின் கலக்காமல் விற்பனை செய்யப்படுவதால் மக்களுக்கு தேவையான அயோடின் நுண்ணூட்ட சத்து கிடைப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. அயோடின் கலந்த உப்பினை வீட்டில் பரிசோதிக்க கஞ்சி, எலுமிச்சம் சாறு மூலம் முயற்சிக்கலாம். அல்லது ஆஷா பணியாளர்கள்,சுகாதார ஆய்வாளர் ஆகியோரிடம் உள்ள அயோடின் பரிசோதனை கிட் மூலம் பரிசோதித்து பார்த்து கொள்ளலாம்.

இந்து உப்பு, கருப்பு உப்பு, முருங்கை உப்பு என்பதெல்லாம் விற்பனைக்கு ஏற்படுத்தும் தந்திரங்கள்.அனைத்து வகை உப்பும் சுவையூட்டும் சோடியம் மட்டுமே என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். என்றார்.நிகழ்ச்சியின் போது வீடுகளில் பயன்படுத்திய உப்புகள் கொண்டு வரபட்டவை மற்றும் மளிகை கடைகளில் உணவுக்கு விற்பனை செய்யப்பட்ட உப்புகளில் அயோடின் உள்ளதா என சோதனை செய்து கட்டப்பட்டது. நிகழ்ச்சியில் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post அயோடின் உப்பு குறித்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: