பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற மல்யுத்த வீராங்கனை அன்டிம் பங்கலுக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் மறுப்பு

ஒலிம்பிக்ஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற மல்யுத்த வீராங்கனை அன்டிம் பங்கலுக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கிஸ் மகளிர் 53 கிலோ எடைப்பிரிவு மல்யுத்ததின் முதல் சுற்று போட்டியில் அன்டிம் பங்கல் தோல்வியடைந்தார். இதனை அடுத்து தனது விடுதி சென்ற அன்டிம் பங்கல் தனது அடையாள அட்டையை தனது சகோதரியிடம் வழங்கி ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து தனது உடைமைகளை எடுத்து வரச்சொல்லியுள்ளார். விதிகளை மீறி ஒலிம்பிக் கிராமத்திற்குள் நுழைந்த அன்டிம் பங்கலின் சகோதரியை பாதுகாவலர்கள் பிரான்ஸ் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அன்டிம் பங்கல் தனது அடையாள அட்டையை தனது சகோதரியிடம் வழங்கியது ஒலிம்பிக் விதி முறைகளின் படி விதி மீறலாக கருத்தபடுகிறது. இது தொடர்பான தகவல் இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் தெரிவிக்கபட்டது. இதனை அடுத்து அன்டிம் பங்கல், அவரது பயிற்சியாளர் மற்றும் அவர் சார்ந்த குழுவினரை உடனடியாக இந்தியாவுக்கு அனுப்ப திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் விதிமீறலில் ஈடுபட்ட அன்டிம் பங்கலுக்கு தடை விதிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

 

The post பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற மல்யுத்த வீராங்கனை அன்டிம் பங்கலுக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: