மகாசக்தி மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா

பாலக்கோடு, ஆக.8:பாலக்கோடு மேல்தெருவில் உள்ள பிரசித்திபெற்ற மகாசக்தி மாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 6ம் தேதி மேல்தெருவில் உள்ள அனைத்து பொதுமக்களும் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபட்டனர். விழாவின் முக்கிய நாளான நேற்று, அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் கங்கா பூஜை செய்தும், பொங்கல் வைத்தும், கோழி, ஆடு பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, மாலை 5 மணிக்கு பக்தர்கள் கரகம், மாவிளக்கு எடுத்தும், அம்மன் வேடமணிந்து முக்கிய வீதிகள் வழியாக சென்றும் அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். இன்று(8ம்தேதி) மாலை வாணவேடிக்கை, மேள தாளங்களுடன் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது.

The post மகாசக்தி மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: