*கருத்தரங்கில் கலெக்டர் விளக்கம்
மன்னார்குடி : டெல்டா மாவட்டங்களில் விளையும் நெல் வகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் விவசாயிகளுக்கு நல்ல முன்னேற்றம் அளிக்கும் என்று மன்னார்குடி கருத்தரங்கில் கலெக்டர் சாருஸ்ரீ விளக்கம் அளித்துள்ளார்.வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் இணைந்து நடத்திய வேளாண் விளை பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கு மன்னார்குடியில் நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை வகித்து கருத்தரங்கை துவக்கி வைத்து பேசுகையில், சங்க காலத்தில், கடலோர மாவட்டங்கள் பலபொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதில் தலைசிறந்து காணப்பட்டது குறித்து நாம் அனைவரும் அறிவோம்.
தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் தவிர்த்து பல மாவட்டங்களில் அப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய பொரு ட்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்து வருகிறோம்.
டெல்டா மாவட்டங்களில் விளைவிக்கக்கூடிய நெல் வகைகளை வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்வது நமக்கு நல்ல முன்னேற்றம் அளிக்கும். இது தனி நபரால் முடியாது. ஏற்றுமதி செய்வது நமக்கு எவ்வாறு லாபம் அளிக்கும் என்பதனை தெரிந்து கொள்வதற்கும், எவ்வாறு வெற்றிகரமாக தரமான பொருட்களை ஏற்றுமதி செய்வது குறித்தும், நாம் பொருட்களை எவ்வாறு நுகர்வோ ரிடம் கொண்டு பிரபலப்படுத்துவது உள்ளிட்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும், விடை அளிக்ககூடிய விதமாக, இக்கருத்தரங்கு விவசாயிகளாகிய உங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றார்.
தொடர்ந்து, தமிழ்நாடு பாசனநீர் வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் பல்வேறு பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, வேளாண் விளைப்பொருட்கள் ஏற்றுமதி மற்றும் நிதி உதவி திட் டங்கள் குறித்து சோபனா குமார், ஏற்றுமதி இடர்பாடு மற்றும் காப்பீடு குறி த்து சென்னை கிளை மேலாளர் சாந்தினி ஸ்ரீதர், கடல் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி மற்றும் நிதி உதவி திட்டங்கள் குறித்து துணை இயக்குநர் டாக்டர்.
அன்சர் அலி வேளாண் விளைப்பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி முதல்வர் ஜகன்மோகன், சிவ ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில், வேளா ண்மை இணை இயக்குநர் ஏழுமலை, துணை இயக்கு நர்கள் (வேளாண் வணிகம்) சாருமதி, வித்யா, வெற்றிச்செல்வன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிர் மலா, வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, வட்டாச்சியர் மகேஷ் குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post டெல்டா மாவட்டங்களில் விளையும் நெல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி appeared first on Dinakaran.