புழல்: சோழவரம் மாரம்பேடு பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (32). இவர் நேற்று முன்தினம் இரவு வேலைக்குச் சென்றுவிட்டு பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். புழல் காவாங்கரை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் நண்பரை சந்தித்தபோது, ஆட்டோவிற்கு பெட்ரோல் நிரப்ப வந்த புழல் அடுத்த சண்முகபுரம் பாரதி நகரைச் சேர்ந்த பழனி (45) என்பவர் மதுபோதையில் முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர் பழனி, முருகனை சரமாரியாக தாக்கினார். உடனே அங்கு வந்த போலீசார் படுகாயமடைந்த முருகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப்பதிந்து தகராறில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் பழனியை கைது செய்து மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post வாலிபரை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.