திருவள்ளூரில் 80 குழந்தைகளுக்கு பொம்மலாட்ட கலைவடிவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

திருவள்ளூர்: திருவள்ளூர், ஐஆர்சிடிஎஸ் அலுவலகத்தில் பால மந்திர்- கின்ஷிப் கேர் சார்பில் நடைபெற்ற விழப்புணர்வு நகழ்ச்சியில் 41 பெற்றோர்கள், பராமரிப்பாளர்களுடன் 80 குழந்தைகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் மேரி ஆக்சிலியா கலந்து கொண்டு பேசும்போது, “குழந்தைகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது, குழந்தைகளிடையே பாலின சமத்துவம் குறித்தும், குழந்தைகள் எதிர்கொள்ளும் பல்வேறு ஆபத்துகள் குறித்து தாய்மார்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

சைபர் பாதுகாப்பு உட்பட பள்ளிகள், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள அபாயங்கள் குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை சைல்டு லைன் 1098க்கு தெரிவிக்க வேண்டும். குழந்தைகளிடம் வெளிப்படையாகப் பேசுவதும் முக்கியம் என்றார்.

இதில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரி கே.மலர்விழி, ஐஆர்சிடிஎஸ் இயக்குனர் பி.ஸ்டீபன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மேலும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பெற்றோர்கள் தங்கள் ஐயங்களை கேள்விகளையாய் எழுப்பி புரிதல் பெற்றனர். இதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு பொம்மலாட்ட கலைவடிவில் நல்லொழுக்கம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

The post திருவள்ளூரில் 80 குழந்தைகளுக்கு பொம்மலாட்ட கலைவடிவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: