திருவள்ளூர் ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்ட பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை: எம்எல்ஏ வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் ஒன்றியத்தில் 38 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த 38 கிராம ஊராட்சிகளை சேர்ந்த 189 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய சேர்மேன் ஜெயசீலி ஜெயபாலன் தலைமை தாங்கினார்.

துணை சேர்மேன் எம்.பர்கத்துல்லா கான், ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வ.ஊ.) குணசேகரன், (கி.ஊ.) ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு ரூ.3.50 மதிப்பிலான வீடு கட்டுவதற்கான உத்தரவை 189 பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதில் மாவட்ட கவுன்சிலர் தெ.தென்னவன், ஒன்றிய கவுன்சிலர்கள் த.எத்திராஜ், எல்.சரத்குமார், டி.எம்.எஸ்.வேலு, வ.ஹரி, பூவண்ணன், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார்கவுன்சில் இணைச்செயலாளர் சி.ஸ்ரீமுருகா, திமுக நிர்வாகிகள் ஈக்காடு எஸ்.வேலு, விமலாகுமார், சொக்கலிங்கம், தரணி, ஈகை கருணாகரன், சௌந்தர்ராஜன், டி.டி.தயாளன், கோபி கிருஷ்ணா, திராவிட தேவன், ஸ்ரீதர், ஊராட்சி தலைவர் மா.தமிழ்வாணன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

The post திருவள்ளூர் ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்ட பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை: எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: