இதையடுத்து வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரை உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு காங். சார்பில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் செல்வப்பெருந்தகை வயநாட்டிற்கு அனுப்பி வைத்தார். கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எம்.எச் அசன் மௌலானா ஏற்பாட்டில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் அடங்கிய வாகனத்தை இன்று சென்னை, சத்தியமூர்த்தி பவனில் செல்வப்பெருந்தகை கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.
The post தமிழ்நாடு காங். சார்பில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வயநாடு அனுப்பிவைப்பு: செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.