தண்டையார்பேட்டை: சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் நவாஸ்கான் (65). இவர் பாரிமுனை ஈவினிங் பஜாரில் உள்ள உறவினரின் செல்போன் கடையில் பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு கடையில் இருந்து 50லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு பைக்கில் தனது வீட்டுக்கு எடுத்து சென்றார். அப்போது மண்ணடி லிங்கி செட்டி தெரு சந்திப்பு அருகே சென்றபோதுபைக்கை பின்தொடர்ந்து வந்த 5 பேர், அவரது பைக் மீது மோதியதுடன் கத்தியால் தாக்கி நவாஸ்கானிடம் இருந்த 50 லட்சம் ரூபாயை பறித்து தப்பினர். இதில் கை, தோள்பட்டை, கால் ஆகிய இடங்களில் காயம் அடைந்த நவாஸ்கான், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதுதொடர்பான புகாரின்படி, வடக்கு கடற்கரை போலீசார் வழக்குபதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் ஹவாலா பணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர். கடையில் வேலை செய்பவர்களே நண்பர்கள் உதவியுடன் பணத்தை கொள்ளையடித்து சென்று நாடகமாடுகிறார்களா என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது.
The post மண்ணடி லிங்கி செட்டி தெருவில் செல்போன் கடை ஊழியரை தாக்கி பறித்த ₹50 லட்சம் ஹவாலா பணம்..? போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.