சின்னக்கரையில் புதிதாக அமையவுள்ள மதுக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

 

பல்லடம், ஆக.5:பல்லடம்-திருப்பூர் மெயின் ரோட்டில் சின்னக்கரை பஸ் நிறுத்தம் அருகே அரசு மதுக் கடை, தனியார் பார் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தக் கோரி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம்.,மனித நேய மக்கள் கட்சி மற்றும் சின்னக்கரை பள்ளி வாசல் நிர்வாகம் சார்பில் பல்லடம் போலீஸ் டி.எஸ்.பி. விஜிகுமாரிடம் மனு அளிக்கப் பட்டது. அதில் கூறியிருப்பதாவது: பல்லடம்-திருப்பூர் மெயின் ரோட்டில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன. – இவற்றில் பெண்கள் பலர் பணிபுரிகின்றனர்.

மேலும் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற பள்ளிவாசலும் அமைந்துள்ளது. இங்கு மதுக்கடை அமைந்தால் சட்டவிரோத செயல்கள் நடைபெறும். அமைதியை சீர்குலைக்கும் சம்பவங்களும் நடைபெறும்.மேலும் அங்குள்ள தனியார் கல்லூரியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் என்பதால் அந்த இடத்தில் மதுக்கடை அமைப்பதை கைவிட வேண்டும். பொதுமக்களுக்கு, இடையூறாகவும், ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளதால், மதுக்கடை அமைக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சின்னக்கரையில் புதிதாக அமையவுள்ள மதுக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: