கண்ணில் குச்சி குத்திய நிலையில் மயக்க ஊசி செலுத்தி காட்டுமாட்டுக்கு வனத்துறையினர் மருத்துவ சிகிச்சை

 

ஊட்டி,ஆக. 5: நீலகிாி வன கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டேரி, சேலாஸ் உள்ளிட்ட பகுதிகளில் கணிசமான எண்ணிக்கையில் காட்டுமாடுகள் உள்ளன. இவை வனங்கள், குடியிருப்பை ஒட்டிய பகுதிகள், தேயிலை தோட்டங்களில் மேய்ச்சலில் ஈடுபட்டிருப்பதை காண முடியும். இந்நிலையில் குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட காட்டேரி அணை பகுதியில் வயதான காட்டுமாடு ஒன்று இடது கண்ணில் கூரான குச்சி குத்திய நிலையில் காயம் ஏற்பட்டுள்ளது. குச்சியும் கண்ணில் சொருகிய படி உள்ளது.

இதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், கண்ணில் குத்தியுடன் உலா வந்த காட்டுமாட்டின் நடமாட்டத்தை கண்காணித்தனர். முதுமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் ராஜேஷ் வரவழைக்கப்பட்டார். பின்னர் காட்டு மாட்டிற்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து அதன் கண்ணில் சிக்கி இருந்த குச்சி அகற்றப்பட்டு காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

The post கண்ணில் குச்சி குத்திய நிலையில் மயக்க ஊசி செலுத்தி காட்டுமாட்டுக்கு வனத்துறையினர் மருத்துவ சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: