முக்கிய நாடாளுமன்ற குழுக்களுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு

புதுடெல்லி பொதுக் கணக்குக் குழு உள்ளிட்ட முக்கிய நாடாளுமன்றக் குழுக்களுக்கான உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசு செலவினங்களை ஆய்வு செய்யும் பொதுகணக்கு குழுவில் மொத்தம் 22 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதில் 15 பேர் மக்களவையில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 19 பேர் மனுசெய்திருந்தனர். ஆனால், போட்டியின்றி உறுப்பினர்களை தேர்வு செய்ய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு முயற்சி செய்தார். வேறு குழுக்களில் இடமளிக்கப்படும் என்று அரசு தரப்பில் வாக்குறுதி தரப்பட்டதால் 4 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர்.

இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், திமுகவை சேர்ந்த டி.ஆர்.பாலு, பாஜவின் அனுராக் தாக்கூர், ரவிசங்கர் பிரசாத், தேஜஸ்வி சூர்யா, திரிணாமுல் கட்சியின் சவுகதா ரே, சமாஜ்வாடி கட்சியின் தர்மேந்திர யாதவ் ஆகியோர் உட்பட 15 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதேபோல், எஸ்சி, எஸ்டி நலன் தொடர்பான குழு,ஆதாயம் தரும் பதவி தொடர்பான கூட்டுக் குழு, இதர பிற்படுத்தப்பட்டோர் நலக் குழு ஆகியவையும் போட்டியின்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களுக்கான தலைவர்களை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விரைவில் பரிந்துரைப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post முக்கிய நாடாளுமன்ற குழுக்களுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: