3% உள்ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு; தமிழக முதல்வருக்கு பி.வில்சன் எம்பி பாராட்டு

சென்னை: தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சிக்காலத்தில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அப்போது சட்டப்பேரவையில், அருந்தியருக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு சட்டத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர், அச்சட்டம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இச்சட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அருந்ததியர் இனத்துக்கு வழங்கப்பட்ட 3 சதவீத உள்ஒதுக்கீடு சரியானதே என்று சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது.

இதுதொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பாராட்டு, வாழ்த்து, நன்றி தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று அகில இந்திய சமூகநீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் மாநிலங்களவை எம்பியுமான பி.வில்சன் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

 

The post 3% உள்ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு; தமிழக முதல்வருக்கு பி.வில்சன் எம்பி பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: