அருந்ததியர் உள்ஒதுக்கீடு வெற்றி கலைஞர் படத்துக்கு மாலை அணிவிப்பு

அவிநாசி, ஆக. 4: அவிநாசி ஊராட்சி ஒன்றியம் தண்டுக்காரன்பாளையம், ஆலத்தூர், பொங்கலூர், எம்.எஸ்.வி.பாளையம், குட்டகம் ஆகிய ஊராட்சிகளுகான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று தாளக்கரை நரசிம்மர் பெருமாள் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமினை பார்வையிட்டு, பொதுமக்கள் கணினி மூலம் பதிவு செய்த கோரிக்கை மனுக்களுக்கான ஒப்புகை சீட்டுகளை கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூர் எல்எம்ஏ செல்வராஜ் ஆகியோர் வழங்கினர்.

கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசுகையில்,‘திருப்பூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு, குடிமங்கம் ஊராட்சி ஒன்றியம், சோமவாரப்பட்டி ஜி.கே.மஹால் திருமண மண்டபத்தில் சேமவாரப்பட்டி, புக்குளம், விருகல்பட்டி ஆகிய கிராம மக்களுக்காக முகாம் நடைபெற்றது. மேலும், மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட அனைத்து கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில் பல்வேறு துறைகள் மூலமாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற முகாம்கள் நடைபெறவுள்ளது.
எனவே, முகாம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை உரிய ஆவணங்களுடன் அந்தத்த ஊராட்சிகளில் முகாம் நடைபெறும் இடங்களில் சம்பந்தப்பட்ட அரசு துறை அலுவலர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி தீர்வு காணவேண்டும்’ என்றார்.

இதனைத் தொடர்ந்து அவிநாசி வட்டம், பொங்கலூர் ஊராட்சி, காந்தி நகரில் ரூ.92.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டு வரும் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் (தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) சரவணக்குமார், உதவி செயற்பொறியாளர் அன்பழகன், உதவி பொறியாளர் சரவணபிரபு, அவிநாசி தாசில்தார் மோகனன், அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், விஜயகுமார், மாவட்ட திமுக அவைத்தலைவர் நடராசன், மாநகராட்சி கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட திமுக தொழிலாளர் அணி அமைப்பாளர் எல்.ஐ.சி. அவிநாசியப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன்நம்பி, திமுக ஒன்றிய செயலாளர்கள் அவிநாசி சிவப்பிரகாஷ், சேவூர் பால்ராஜ், ஊராட்சி மன்றத்தலைவர்கள் மங்கரசவலையபாளையம் வரதராஜன், குட்டகம் புவனேஸ்வரி, பொங்கலூர் விமலா, ஆலத்தூர் பழனிசாமி, தண்டுக்காரன்பாளையம் மயில்சாமி, ஊராட்சிமன்ற செயலர்கள் கோபாலன், ஜெயச்சந்திரன், மீனாட்சி, செந்தில், பால்ராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள சோழாபுரி அம்மன்  சிவ துர்க்கை அம்மன் கோயிலில் ஆடி 3வது வெள்ளி மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் எம்எல்ஏ கலந்து கொண்டு அன்னதானம் மற்றும் பெண்களுக்கு மாங்கல்ய பொருட்கள் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் மாநகர அவை தலைவர் ஈஸ்வரமூர்த்தி. கவுன்சிலர் சாந்தாமணி, தலைமைக் கழக பேச்சாளர் ரஜினி செந்தில், மாநில மகளிர் பிரசார அணி செயலாளர், உமா மகேஸ்வரி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி, தெற்கு மாநகர மகளிர் அணி துணை அமைப்பாளர் பாண்டீஸ்வரி ஹரிகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு பூஜையில் மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய பகுதி கழக மகளிர் அணி நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு சட்டப் போராட்டத்தில் உச்ச நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு கொடுத்தது செல்லும் என தீர்ப்பு கிடைத்ததன் எதிரொலியாக, இந்த உள் ஒதுக்கீடை வழங்கிய கலைஞருக்கு மரியாதை செய்யும் விதமாக திமுக சார்பில் மைவாடி ஊராட்சி, நரசிங்காபுரத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், சார்பணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், கிளை செயலாளர்கள் மற்றும் கழக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post அருந்ததியர் உள்ஒதுக்கீடு வெற்றி கலைஞர் படத்துக்கு மாலை அணிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: