கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கான வசதிகள் குறித்த ஆய்வறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு 2 வாரம் கெடு!!

சென்னை: கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கான வசதிகள் குறித்த ஆய்வறிக்கை தர தமிழ்நாடு அரசுக்கு 2 வாரம் அவகாசம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்து 70 பேர் பலியாகினர். இதையடுத்து கள்ளச் சாராயம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலைப்பகுதியில் காய்ச்சப்படுவதாக தகவல் வெளியான நிலையில், கல்வராயன் மலை மக்கள் மேம்பாடு தொடர்பாக, சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, மேற்கண்ட வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது .

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் தலைமையில், ஆய்வுகளை முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்,” எனக் கோரிக்கை விடுத்தார். இதை. ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆகஸ்ட் 21ம் தேதி வரை தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி, விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தனர். மேலும், கல்வராயன் மலைப்பகுதி வனத்துறையின் கீழ் வருவதால் வழக்கில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலரை தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், வனத்துறை தரப்பில் தனியாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

The post கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கான வசதிகள் குறித்த ஆய்வறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு 2 வாரம் கெடு!! appeared first on Dinakaran.

Related Stories: