அடுத்த இரண்டு நாட்களுக்கு சற்று உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றும் தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.51,680-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ. 6,460-க்கும் விற்பனையாகிறது. ஆனால் மறுபக்கம், வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசு குறைந்து ரூ.91-க்கும், கிலோவிற்கு ரூ.700 குறைந்து ரூ.91,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி (01-08-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.51,440-க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ. 6,430-க்கும் விற்பனையாகிறது. அதே போல், வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசு உயர்ந்து ரூ.91.70-க்கும், கிலோவிற்கு ரூ.700 உயர்ந்து ரூ.91,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
The post 3வது நாளாக உயர்ந்த தங்கம் விலை: சென்னையில் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.51,680-க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.