வர்த்தக காஸ் சிலிண்டர் விலை 7.50 அதிகரிப்பு

சேலம்: காஸ் சிலிண்டர்களுக்கு நடப்பு மாதத்திற்கான புதிய விலை பட்டியலை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நேற்று வெளியிட்டது. அதன்படி தொடர்ச்சியாக 5வது மாதமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால், சென்னையில் 818.50, சேலத்தில் 836.50 என பழைய விலையே நீடிக்கிறது. அதேசமயம், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை கடந்த ஏப்ரலில் 30.50, மே மாதத்தில் 19, ஜூனில் 70.05, ஜூலையில் 31 என அடுத்தடுத்து குறைக்கப்பட்டது.

ஆனால் நடப்பு மாதத்தில் வர்த்தக காஸ் சிலிண்டரின் விலை 7.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் தற்போது 1,817க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 107வது நாளாக எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் 100.75க்கும், டீசல் 92.34க்கும் விற்கப்படுகிறது.

The post வர்த்தக காஸ் சிலிண்டர் விலை 7.50 அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: