சேலத்தில் தோல்வி: எடப்பாடி ‘ஃபீலிங்’


சேலம்: நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கான காரணம் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டு வருகிறார். அதன்படி, சேலம் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் செம்மலை, மாவட்ட செயலாளர்கள் வெங்கடாஜலம், இளங்கோவன், வீரபாண்டி உள்ளிட்டோர் பேசினர். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘சேலம் தொகுதியில் நாம் தோற்போம் என கனவில் கூட நினைத்துப்பார்க்கவில்லை.

சிலர் எதிராக வேலை செய்தார்கள். அவர்கள் யாரென எனக்குத் தெரியும். சொன்னால் வருத்தப்படுவீர்கள். எந்தந்த இடங்களில் வீக்காக இருக்கிறது என உங்களிடம் கூறினேன். அந்த இடங்களில் நீங்கள் கவனம் செலுத்தி இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். இனி நீங்கள் வருகிற சட்டமன்ற தேர்தலில் எந்த இடங்களில் குறைகள் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து அதனை நிவர்த்தி செய்ய வேண்டும்’ என்று உருக்கமாக பேசியுள்ளார்.

The post சேலத்தில் தோல்வி: எடப்பாடி ‘ஃபீலிங்’ appeared first on Dinakaran.

Related Stories: