வினாத்தாள் கசிவு வெளியே, மழைநீர் கசிவு உள்ளே: புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் மழைநீர் கசிந்ததையொட்டி சு.வெங்கடேசன் எம்.பி. தாக்கு

டெல்லி: டெல்லியில் பெய்து வரும் மழையை தாக்கு பிடிக்க முடியாமல் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் தண்ணீர் கசிவது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நாடாளுமன்றத்தை நாட்டு அர்ப்பணித்த பிரதமர் நரேந்திர மோடி,

இது கட்டடம் மட்டுமல்ல 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கை மற்றும் கனவுகளின் பிரதிபலிப்பு என்று கூறியிருந்தார். இந்நிலையில், டெல்லியில் பெய்து வரும் மழையை தாக்கு பிடிக்க முடியாமல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நீர் கசிவு ஏற்பட்டு இருப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்;

வினாத்தாள் கசிவு வெளியே.
மழைநீர் கசிவு உள்ளே.

நேற்றைய மழையின் போது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் குடியரசுத் தலைவர் வரும் பிரதான வாயிலின் வழியே மழைநீர் வந்து கொண்டிருந்தது. என்று விமர்சித்துள்ளார்.

The post வினாத்தாள் கசிவு வெளியே, மழைநீர் கசிவு உள்ளே: புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் மழைநீர் கசிந்ததையொட்டி சு.வெங்கடேசன் எம்.பி. தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: