இயற்கை வாயு, திரவத்தில் இயக்கி அசத்தல்; கோவையில் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி டவுன் பஸ்கள்: அதிக மைலேஜ்; சுற்றுச்சூழல் மாசு குறைவு

கோவை: கோவையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி மூலம் இயங்கும் 2 அரசு டவுன் பஸ்கள் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி என்ற அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு, எல்என்ஜி என்ற திரவ இயற்கை எரிவாயு என்ற இயற்கை எரிவாயு மூலம் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில், மதுரை, சேலம், கும்பகோணம் போக்குவரத்து கழகங்களில் தலா 2 பஸ்கள் வீதம் சிஎன்ஜி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் மூலம் டீசலுக்கு செலவிடப்படும் தொகை குறைந்துள்ளதாகவும், இயக்க கிலோ மீட்டர் (மைலேஜ்) அதிகரித்து உள்ளதாகவும் தெரியவந்தது.

குறிப்பாக, ஒரு லிட்டர் டீசலுக்கு 5.2 கிமீ சென்ற நிலையில், சிஎன்ஜி மூலம் 6.17 கிலோ மீட்டர் வரை செல்ல முடிகிறது. இந்நிலையில், சோதனை முறையில் கோவையில் உக்கடம் வழித்தடத்தில் சிஎன்ஜி மூலம் இயங்கும் 2 பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன. உக்கடத்தில் இருந்து மயிலம்பட்டி வரை இயக்கப்படும் எண்.39 பஸ் மற்றும் ரயில் நிலையம் முதல் கிணத்துக்கடவு வரை இயக்கப்படும் எண்.33ஏ ஆகிய 2 டவுன் பஸ்கள் சிஎன்ஜி பஸ்களாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் இயக்குவதால் சுற்றுச்சூழல் மாசு குறையும் எனவும், செலவு குறையும் எனவும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சோதனை வெற்றி அடைந்தால் கூடுதல் பஸ்கள் சிஎன்ஜியாக மாற்றப்படும் என அவர்கள் கூறினர்.

The post இயற்கை வாயு, திரவத்தில் இயக்கி அசத்தல்; கோவையில் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி டவுன் பஸ்கள்: அதிக மைலேஜ்; சுற்றுச்சூழல் மாசு குறைவு appeared first on Dinakaran.

Related Stories: