நியாயவிலை கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து பொருட்களை விநியோகம் செய்ய திட்டம்

சென்னை: நியாயவிலை கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து பொருட்களை விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் 234 தொகுதிகளில் தலா ஒரு ரேஷன் கடையை தேர்வு செய்து தொடங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக சேலத்தில் ஒரு ரேஷன் கடையில் தற்போது ரேஷன் பொருட்கள் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாடு அரசு பொதுவிநியோக திட்டத்தின் மூலம் நியாவிலை கடைகளில் பல்வேறு பொருட்களை வழங்கி வருகிறது. அதன்படி அரிசி, பருப்பு, பாமாயில், சக்கரை, கோதுமை உள்ளிட்டவை பொதுமக்கள் முன்பாக எடை போடபட்டு வழங்கப்ப்டுகிறது. இருப்பினும் நீண்டகாலமாக ரேஷன் கடைகளில் எடை குறைவாக வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. எனவே அதனை சரி செய்யும் வகையில் ரேஷன் கடைகளுக்கு பாக்கேட் மூலம் பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் மட்டும் சோதனை அடிப்படையில் பாக்கேட் மூலம் விற்பனை செய்யும் பணியானது தொடங்கப்பட்டுள்ளது. இதனை மேலும் அதிகரிக்கும் வகையில் தொகுதிக்கு ஒரு ரேஷன் கடை என தேர்வு செய்யப்பட்டு பாக்கெட் மூலம் அரிசி, சர்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்திற்கு மக்களிடையே கிடைக்கபெறும் வரவேற்பை பொறுத்து அனைத்து ரேஷன் கடைகளிலும் இதே போல பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யும் முறையை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசின் உணவு பொருள் வழங்கள் துறை திட்டமிட்டுள்ளது.

The post நியாயவிலை கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து பொருட்களை விநியோகம் செய்ய திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: