மாநில மகளிர் ஆணையத்திற்கு பிரத்யேக வலைத்தளம்: அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்


சென்னை: தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் பிரத்யேக வலைத்தளத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சமூகநலத் துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். மகளிர் ஆணையத்தின் பணிகள் அனைத்தையும் இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ள ஆணையத்திற்கென முதன்முறையாக தனி வலைத்தள முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. www.tnwomencommission.tn.gov.in. என்ற முகவரி கொண்ட இந்த வலைத்தளத்தை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். இந்த வலைத்தளத்தில் ஆணையத்தின் அமைப்பு, பணிகள், ஊடக முகவரிகள், பெண்களுக்கான சட்டங்கள் மற்றும் தொடர்புடைய துறைகளை அணுகுவதற்கான முகவரிகள் விரிவாக வழங்கப்பட்டுள்ளன.

மேலும் வருங்காலத்தில் இணையதளம் வாயிலாகவே மகளிர் தங்கள் புகார்களை பதிவு செய்யவும், அவற்றின் மீது ஆணையம் வாயிலாக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி குமரி, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் செயலர் மற்றும் சமூக நல ஆணையர் அமுதவல்லி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு இணைச்செயலாளர் வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post மாநில மகளிர் ஆணையத்திற்கு பிரத்யேக வலைத்தளம்: அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: