STAND WITH WAYANAD… வயநாடு துயரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்க விரும்புவோர் வழங்கலாம்: கேரள அரசு வேண்டுகோள்

திருவனந்தபுரம் : வயநாடு நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ள, நிதியுதவி தந்து உதவுமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலை ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பலியானார் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது. அதில் 10 தமிழர்களும் அடங்குவர்.100க்கும் மேற்பட்டோரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கேரள நிலச்சரிவு மீட்பு நிவாரண பணிகளுக்கு நிதியுதவி வழங்குங்கள். ஒவ்வொரு பங்களிப்பும், குறைந்த தொகையாக இருந்தாலும் அது மிகவும் உதவியாக இருக்கும். கேரள முதல்வர் பொது நிவாரண நிதிக்கான வங்கிக் கணக்கு 67319948232 எண்ணில் நிதியுதவி வழங்கலாம். Keralacmdrf@sbi என்ற கூகுள் பே கணக்கிலும் நிதியுதவி அளியுங்கள்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Account Number: 67319948232
Name: Chief Minister’s Distress Relief Fund
Bank: State Bank of India
Branch: City Branch, Thiruvananthapuram
IFSC: SBIN0070028
SWIFT CODE: SBININBBTOB
Account Type: Savings
PAN: AAAGD0584M

போன் பே/ கூகுள் பே keralacmdrf@sbi

நிவாரண உதவியாகப் பொருட்களை வழங்குவோர் 1077 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்!

உபயோகப்படுத்திய பழைய பொருட்களைக் கொண்டு வந்தால் அவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது!

The post STAND WITH WAYANAD… வயநாடு துயரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்க விரும்புவோர் வழங்கலாம்: கேரள அரசு வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: