மேகதாது அணை குறித்து இரு மாநிலங்களும் பேசி தீர்வு காண பிரதமர் மோடி யோசனை: கர்நாடக அமைச்சர் திட்டவட்ட மறுப்பு!!

டெல்லி: மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகாவும் அமர்ந்து பேசி சுமூக தீர்வை எட்ட வேண்டும் என பிரதமர் மோடி யோசனை வழங்கியுள்ளார். தமிழகம் – கர்நாடகா இடையே காவிரி ஆற்றில் தண்ணீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. இதற்கிடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடியில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சித்து வருகிறது. இதற்கு ஒப்புதல் தருமாறு ஒன்றிய அரசுக்கு கர்நாடகா அனுமதி கேட்டுள்ளது. ஆனால் அனுமதி தரக்கூடாது என தமிழக அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். அந்த சந்திப்பில், மேகதாது விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது, மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகாவும் அமர்ந்து பேசி சுமூக தீர்வை எட்ட வேண்டும் என பிரதமர் மோடி யோசனை வழங்கியுள்ளார். இந்நிலையில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

 

The post மேகதாது அணை குறித்து இரு மாநிலங்களும் பேசி தீர்வு காண பிரதமர் மோடி யோசனை: கர்நாடக அமைச்சர் திட்டவட்ட மறுப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: