இந்நிலையில், பலியான எம்.ஜி.ஆர் நகர் துரைசாமியின் ஆதரவாளர்கள் சில தினங்களுக்கு முன், இன்ஸ்டாகிராம் தளத்தில், ‘mgr-nagar-official’ முகவரியில் இருந்து திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் புகைப்படத்தை பகிர்ந்து, அத்துடன் ‘திருச்சியில் சிந்தித்து பார்க்க முடியாத அளவிற்கு தலைகள் சிதறும்’ என்று பதிவிட்டு ரீல்ஸ் வெளியிட்டு இருந்தனர்.
விசாரணையில் திருச்சி புத்தூர் எம்.ஜி.ஆர்.நகரைச் சோ்ந்த ராஜபாண்டி (21) என்பவர் ரீல்ஸ் வெளியிட்டது தெரியவந்தது. இதற்கிடையே குழுமணி உறையூர் சாலையில் ராமநாதநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகில் ராஜபாண்டி இருப்பது தெரிந்து அவரை பிடிக்க சென்றனர். அப்போது, பட்டாகத்தியை காட்டி மிரட்டியுள்ளார். பின்னர் போலீசார் மடக்கி பிடித்தனர். இதுதொடர்பாக சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post ‘திருச்சியில் தலைகள் சிதறும்’ எஸ்பிக்கு கொலை மிரட்டல் விடுத்து இன்ஸ்டாவில் ரீல்ஸ்: வாலிபர் கைது appeared first on Dinakaran.