திருவெண்ணெய் நல்லூர் அருகே அருங்குறிக்கையில் கிணறு வெட்டும் பணியின்போது கயிறு அறுந்து 3பேர் உயிரிழப்பு

விழுப்புரம்: திருவெண்ணெய் நல்லூர் அருகே அருங்குறிக்கையில் கிணறு வெட்டும் பணியின்போது கயிறு அறுந்து 3பேர் உயிரிழந்துள்ளனர். 100 அடி கிணற்றை ஆழப்படுத்தும் பணியின் போது கயிறு அறுந்து விழுந்ததில் 3 பேர் கை, கால் முறிந்து உயிரிழந்தனர்.

திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருங்குறிக்கை கிராமத்தில் கோவிந்தன் என்பவருடைய மகன் கண்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த மணியை திருகோவிலூர் அருகே உள்ள பெருங்குரிக்கை கிரமத்தை சேர்ந்த தணிக்காச்சலம்(48) , ஹரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன்(40), நெய்வேனை கிராமத்தை சேர்ந்த முருகன்(38) ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று கிணற்றை ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது பொக்லைன் இயந்திரத்தில் கயிறு கட்டி மூவரும் கிணற்றுக்குள் இறங்கியுள்ளனர். இதில் எதிர்பாராத விதமாக இயந்திரத்தின் இரும்பு ரோப் அறுந்து 100 அடி ஆழ கிணற்றில் மூவரும் விழுந்தனர். இதில் மூவரும் கை,கால்கள் முறிந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இது தகவலறிந்து வந்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவெண்ணெய் நல்லூர் அருகே அருங்குறிக்கையில் கிணறு வெட்டும் பணியின்போது கயிறு அறுந்து 3பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: