நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தாவுக்கு அவமரியாதை மே.வங்க சட்டப்பேரவையில் விவாதிக்க நோட்டீஸ்

கொல்கத்தா: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மம்தாவின் மைக் அணைக்கப்பட்டது குறித்து விவாதிக்க கோரி மேற்கு வங்க சட்டப்பேரவையில்அமைச்சர் பனாஸ் பூனியா சிறப்பு நோட்டீஸ் வழங்கினார். டெல்லியில் கடந்த 27ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். முதல்வர் மம்தா பேசும்போது அவரது மைக் சுவிச் ஆப் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேச அனுமதிக்கப்படாததால் தான் அவமானப்படுத்தப்பட்டதாக பானர்ஜி குற்றம்சாட்டினார். இந்நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவையில், முதல்வர் மம்தாவின் மைக் நிதி ஆயோக் கூட்டத்தில் அணைத்து வைக்கப்பட்டது குறித்து விவாதிக்க கோரி அமைச்சர் பனாஸ் பூனிய சிறப்பு நோட்டீஸ் தாக்கல் செய்தார். முதல்வர் மம்தாவை நடத்திய விதத்துக்கு அவை வேதனை தெரிவிப்பதாக கூறிய அவர் இது கூட்டாட்சி கோட்பாடுக்கு எதிரானது என்றார். மேலும் திரிணாமுல் எம்எல்ஏக்களும் முதல்வர் மம்தா அவமானப்படுத்தப்பட்டதாக கூறி கண்டனம் தெரிவித்தனர்.

The post நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தாவுக்கு அவமரியாதை மே.வங்க சட்டப்பேரவையில் விவாதிக்க நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: