அண்ணா மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் கலெக்டரிடம் மனு

 

கோவை, ஜூலை 30: கோவை மேட்டுப்பாளையம் ரோடு அண்ணா காய்கறி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் மாடசாமி, செயலாளர் கனகராஜ், பொருளாளர் அப்துல்சமது ஆகியோர் தலைமையில் காய்கறி வியாபாரிகள், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாங்கள் கடந்த 36 ஆண்டுகளாக இந்த மார்க்கெட்டில் வணிகம் செய்து வருகிறோம். இதை நம்பி ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. தற்போது அண்ணா மார்க்கெட்டில் 476 கடைகளிலும் புனரமைப்பு பணி நான்கு கட்டங்களாக நடந்து வருகிறது. இங்கு, ஏற்கனவே கடை உள்ளவர்களுக்கு மட்டும் மீண்டும் கடைகள் வழங்கப்படும் என வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டது. அதனால் நாங்கள் ஒரு பகுதியாக, புனரமைப்பு செய்வதற்கு கடைகளை காலி செய்து கொடுத்தோம்

தற்போது ஒரு பகுதியில் புனரமைப்பு பணி முடிந்து, கடைகள் பொது ஏலம் விடப்படும் என மாநகராட்சி சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது, வாய்மொழி உத்தரவுக்கு முரணாக உள்ளது. எனவே, மாநகராட்சி நிர்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். அதனால், ஏற்கனவே கடைகள் உள்ளவர்களுக்கு, மீண்டும் கடைகள் ஒதுக்கீடு செய்யவேண்டும். பொது ஏலத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

 

The post அண்ணா மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: