கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சரவணகுமாரி, பிடிஒக்கள் சந்திரசேகர், அமிழ்தமன்னன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர்கள் மதன்மோகன், சீனிவாசன்,ஜெயச்சந்திரன், துணை தலைவர் எல்லப்பன், திமுக நிர்வாகிகள் குணசேகரன், ரமேஷ், ரவி, மணிபாலன், பாஸ்கரன், அறிவழகன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ரேணுகாமுரளி, சுசீலாமுர்த்தி, பிரபு, கஜா முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து புதுகும்மிடிப்பூண்டி, அயநெல்லூர், பாத்தபாளையம், சிறுபுழல்பேட்டை, எஸ்.ஆர்.கண்டிகை, ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் மனு அளித்தனர். ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை, காவல்துறை, மின்வாரியத்துறை, மீன்வளத்துறை, வேளாண்துறை, தொழில் துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட 15 துறைகள் சார்பில் அதிகாரிகள் பங்கேற்று 1,261 மனுக்களை மக்களிடம் வாங்கி அதற்கான ஒப்புகை சீட்டுகளை வழங்கினர்.
பின்னர் உடனடியாக தீர்வு காணக்கூடிய மனுக்களை பரிசீலனை செய்து சிலருக்கு சான்றிதழ்களை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பொதுமக்களுக்கு வழங்கினர். முகாம் ஏற்பாடுகளை புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் அஸ்வினி சுகுமாரன், ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு, துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் முன் நின்று நடத்தினர்.
The post புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: எம்எல்ஏ சான்றிதழ்களை வழங்கினார் appeared first on Dinakaran.