4 ஆண்டு சிறை தண்டனை ரத்து; சமாஜ்வாடியின் அப்சல் அன்சாரி எம்பியாக தொடரலாம்: அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி


பிரயாக்ராஜ்: சமாஜ்வாடி எம்பி அப்சல் அன்சாரி எம்பியாக தொடருவதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் காசிபூர் தொகுதியில் இருந்து இந்தியா கூட்டணி சார்பாக சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்ட அப்சல் அன்சாரி வெற்றி பெற்றார். இவர் கடந்த 2005ம் ஆண்டு நடந்த பாஜ எம்எல்ஏ கிருஷ்ணானந்த் ராய் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் இவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காசிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் காசிப்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அப்சல் அன்சாரி எம்பியாக தொடருவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் காசிபூர் எம்பியின் தண்டனையை அதிகரிக்க கோரிய உத்தரப்பிரதேச அரசின் மனு மற்றும் கிருஷ்ணானந்த் ராயின் மகனின் பியூஷ் குமார் ஆகியோரின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

The post 4 ஆண்டு சிறை தண்டனை ரத்து; சமாஜ்வாடியின் அப்சல் அன்சாரி எம்பியாக தொடரலாம்: அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: