சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

 

திருப்பூர்,ஜூலை 29: திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் பனியன் தொழில் உட்பட பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மாநகரில் எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும்.

மேலும், ஆடைகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஜாப் ஒர்க் செய்வதற்கு பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில், திருப்பூர்-அவிநாசி ரோடு, அம்மாபாளையம் பகுதியில் மாடுகள் ரோட்டில் சுற்றித்திரிகிறது. ஹாரன் அடித்தாலும் மாடுகள் நகர்வதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: அவிநாசி சாலையில் கடந்த சில நாட்களாகவே மாடுகள் அங்கும், இங்குமாக சுற்றித்திரிகின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். மாடுகள் திடீரென குறுக்கே வருவதால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சில நேரங்களில் இந்த மாடுகள் ரோட்டிலேயே படுத்துக்கிடக்கின்றன. அதனால் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த மாடுகளின் உரிமையாளர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றார்.

The post சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: